பரமக்குடி அனுமார் கோயிலில் மார்ச் 28 ராமநவமி கொடியேற்றம்; ஏப்.7ல் சீதா திருக்கல்யாணம்
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28 காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பரமக்குடியில் நகராட்சி அருகில் மூலவராக புளியமரம் உள்ள நிலையில் புனிதப்புளி ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இங்கு ராமர், சீதை, லட்சுமணன் சன்னதி இருக்கிறது. மார்ச் 28 காலை ராம நவமி விழா துவங்கி, மார்ச் 29 காலை கருடக் கொடி ஏற்றப்பட உள்ளது. தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் மாலை வீதி உலா வருகிறார். ஏப்.,5ல் ராமர், பாண்டுரங்கர் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலை புத்திர காமேஷ்டி யாகம் பாயாச கட்டளை விழா துவங்கி குழந்தை பேறு வேண்டி விரதம் இருப்பவர்கள் யாகத்தில் கலந்து கொள்வர். ஏப்.,6 காலை ராமஜனம் எனப்படும் ராமநவமி விழா நடக்கிறது. ஏப்.,7 காலை சங்கர மடத்திலிருந்து ராமர் மாப்பிள்ளை அழைப்பு நடக்கும். தொடர்ந்து சீதா ராமர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு பெருமாள் தாயாருடன் பட்டண பிரவேசம் வருவார்.ஏப்., 9 ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.