உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புற்று நோய் கண்டறிந்து சிகிச்சையில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் 

புற்று நோய் கண்டறிந்து சிகிச்சையில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் 

ராமநாதபுரம்: 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் புற்று நோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 265 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 196 இடைநிலை சுகாதார செவிலியர்கள், 109 பேர் புண் போன்றவற்றிற்கு சிகிச்சையளிப்பவர்கள், 10 பிசியோதெரபிஸ்ட் உட்பட 591 பேர் பணிபுரிகின்றனர்.தன்னார்வலர்கள், செவிலியர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 வீடுகளுக்கு சென்று 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்று நோய், காச நோய், தொழுநோய் அறிகுறிகளை கேட்டறிந்து சந்தேகம் இருப்பவர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முறையான பரிசோதனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 லட்சத்து 36 ஆயிரத்து 646 பேர் வசிக்கின்றனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 லட்சத்து 82 ஆயிரத்து 978 பேர் உள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 82 ஆயிரத்து 672 பேரை மக்களைத் தேடி மருத்துவ தன்னார்வலர்கள் நேரில் கண்டறிந்து அவர்களுக்கான பிரச்னைகளை கேட்டறிந்து பரிசோதனை செய்துள்ளனர்.இதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 913 பேர் ரத்த அழுத்த நோயாலும், 19,890 பேர் சர்க்கரை நோய் பாதிப்பிலும், சர்க்கரை, ரத்த அழுத்தம் இரண்டும் பாதித்தவர்கள் 87 ஆயிரத்து 14 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவர்களில் 19,525 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சையும், 18,113 பேருக்கு புண் போன்றவற்றிற்கு வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மார்பக புற்று நோயால் 1160 பேரும், கர்ப்பப்பை வாய் புற்று நோயால் 945 பேரும், வாய் புற்று நோயால் 459 பேர் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 99.82 சதவீதம் வரை நோய் கண்டறியும் பணிகளை செய்துள்ளனர். இத்திட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 672 பேர் பயனடைகின்றனர்.மேலும் புற்று நோய் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இருந்தால் மாத்திரைகள் 2 மாதங்களுக்கு வீடுகளுக்கு சென்று வழங்கப்படும்.அதன் பின் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால் பரிசோதனை செய்து டாக்டர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி