உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதல்வர் கோப்பை ஆண்கள் கபடி போட்டியில் ராமநாதபுரம் முதல் பரிசு

முதல்வர் கோப்பை ஆண்கள் கபடி போட்டியில் ராமநாதபுரம் முதல் பரிசு

முதுகுளத்துார் : சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை சீனியர் ஆண்கள் கபடி இறுதி போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் பிரிவு கபடி போட்டி நடந்தது. இதில் மாநில முழுவதும் 18 அணிகள் கலந்து கொண்டனர். முடிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணியை வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் அணி முதல் பரிசை பெற்றது.ராமநாதபுரம் அணி கேப்டன் மணிகண்டனிடம் வெற்றி பெற்ற தொகை ரூ.9 லட்சத்திற்கான காசோலை,கோப்பை வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட அணியில் விளையாடிய வீரர்களின் 3 பேர் தமிழக போலீஸ் அணியில் விளையாடுகின்றனர்.இதில் தமிழக போலீசில் கணேசன், நந்தகுமார், மணிகண்டன், அரவிந்த் பணிபுரிகின்றனர். மாநில அளவிலான முதல்வர் கோப்பை கபடி போட்டியில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களை பொதுமக்கள், கபடி கழகம் நிர்வாகிகள், வீரர்கள் ஏராளமானோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை