ராமநாதபுரம் லட்சுமிபுரம் ஊருணி கரையில் ஆறாக ஓடும் கழிவு நீர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரம் ஊருணிகரையில் ஆறாக ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதாரக்கேடுஏற்படும் நிலை உள்ளது.ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் பராமரிப்பு பணிகளை சரியாக செய்யாததால் நகரின் பல பகுதிகளில்பாதாள சாக்கடை மேன்ேஹால் பகுதிகளில் கழிவு நீர் நிரம்பி தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.இதில் வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் பாதசாரிகள் மீது சேற்றை வாரி வீசுவது போல் விழுகிறது. இப்பகுதியில் குடியிருப்பவர்கள் துர்நாற்றத்தால் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் பதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.கழிவு நீர் தெருக்களில் வெளியேறுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.