உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம்--மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்

ராமநாதபுரம்--மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்

ராமநாதபுரம்:ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம்--மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதன்படி மைசூருவில் இருந்து ராமநாதபுரத்திற்கு செப்.,15 முதல் அக்.,27 வரை திங்கள் கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மாண்டியா, பெங்களூரு, ஓசூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி வழியாக இயக்கப்படும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி