தேசிய கராத்தேயில் ராமநாதபுரம் மாணவர்
ராமநாதபுரம்: டில்லியில் இந்திய கராத்தே அசோசியேஷன் சார்பில் நடக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர் பங்கேற்கிறார்.ராமநாதபுரம் நேஷனல் அகாடமி சென்ட்ரல் பள்ளி மாணவர் எஸ்.சாகீத் 9. இவர் சென்னையில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று தங்கம் வென்றார்.இதையடுத்து தமிழகம் சார்பில் டில்லியில் இந்திய கராத்தே அசோசியேஷன் நடத்தும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கிறார். மாணவரை பயிற்சியாளர் கண்ணன், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்தினர்.