டில்லி குடியரசு தின விழாவில் ராமநாதபுரம் மாணவர்கள்
ராமநாதபுரம்:டில்லியில் ஜன.26குடியரசு தின விழா கொண்டாட்ட கலைநிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக அணியில் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் 3 பேர் தேர்வாகியுள்ளனர்.ஆண்டுதோறும் ஜன.26 ல் டில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.இவ்வாண்டு கலைநிகழ்ச்சிகளுக்காக மத்திய அரசின் கலைபண்பாட்டுத் துறை சார்பில் பங்கேற்க தகுதியான 62 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இதில் ராமநாதபுரம் கல்லுாரி மாணவர்கள் ஆகாஷ், ஹரிஸ்ராகுல், நர்சிங் பயிற்சி மாணவி ஜெயஸ்ரீ ஆகியோர் கரகாட்ட நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு டிச.26 முதல் ஜன.25 வரை டில்லியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.