உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் திரவுபதியம்மன்  கோயில் பூக்குழி உற்ஸவ விழா 

ராமநாதபுரம் திரவுபதியம்மன்  கோயில் பூக்குழி உற்ஸவ விழா 

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் வடக்குத் தெரு திரவுபதியம்மன் கோயில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.ராமநாதபுரம் வடக்குத் தெரு திரவுபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா செப்.16ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் கோயிலில் பூவலங்காரம், திருக்கல்யாணம், அன்னதானம், திருவிளக்கு பூஜை, தபசு நிலை, கீசகவதம், அரவான் களப்பலி நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு பூக்குழி உற்ஸவம் நடந்தது. இதில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை