உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் இன்று முதல்   9 நாட்கள் தொடர்  விடுமுறை

ராமநாதபுரத்தில் இன்று முதல்   9 நாட்கள் தொடர்  விடுமுறை

ராமநாதபுரம், : ஆருத்ரா தரிசனவிழா, பொங்கல்பண்டிகை என ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டு அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு 9 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்துள்ளது.உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு ஜன.13(திங்கள்) ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் பொருட்டு பிப்.,1 சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (ஜன.11) இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை துவங்கி ஜன.19 ஞாயிறு வரை அரசு அலுவலர்கள், பள்ளி,கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைத்துஉள்ளது. இதன் காரணமாக நேற்றே கலெக்டர் அலுவலகம் உட்பட பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை