உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மார்ச் 10ல் பொன் உப்பு அள்ள ராமநாதபுரம் தொழிலாளர்கள் திட்டம்

மார்ச் 10ல் பொன் உப்பு அள்ள ராமநாதபுரம் தொழிலாளர்கள் திட்டம்

ராமநாதபுரம்:தமிழகத்தில் உப்பு உற்பத்தி சீசன் துவங்கியுள்ளதால் மார்ச்10 ல் முதல் துவக்க நிகழ்வாக பொன் உப்பு அள்ள தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.பருவமழைக்காலத்தில் செப்., முதல் ஜன., வரை உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு அதன் பிறகு ஜன., கடைசி வாரத்தில் இருந்து உப்பு உற்பத்திக்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கும். அதன்படி உப்பு பாத்திகள் அமைப்பது, ஏற்கனவே உள்ள பாத்திகளில் பராமரிப்பு பணிகள் செய்து உப்பு உற்பத்தி சீசன் துவங்கியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வாலிநோக்கம், தேவிபட்டினம் பகுதியில் உள்ள அரசு உப்பு உற்பத்தி கழகம் சார்பில் உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளங்களில் 27 டிகிரி செல்சியசிற்கு மேல் வெப்பம் இருந்தால் மட்டுமே உப்பு உற்பத்தி செய்ய முடியும்.வெப்பம் குறைவாக இருந்தால் உப்பு உற்பத்தி பாதிக்கும். இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சீசன் துவங்கினாலும் முதல் உற்பத்தியாக எடுக்கப்படுவது பொன் உப்பு என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் வைத்து தெயவங்களுக்கு வழிபாடு நடத்திய பிறகே உப்பள தொழிலாளர்கள் பொன் உப்பு அள்ள தொடங்குவர். இதனை மார்ச் 10ல் அள்ள திட்டமிட்டுள்ளனர்.அரசு உப்பு உற்பத்தி கழக தொழிலாளர் வடிவேல் கூறுகையில் ''உப்பு உற்பத்தி பெரும்பாலும் ஜன., முதல் செப்., மாதம் வரை இருக்கும். இதில் ஆண்டுக்கு அரசு உப்பு உற்பத்திக்கழகம் சார்பில் 1.70 லட்சம் முதல் 2 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த 8 மாதங்களில் மழை பெய்யாமல் இருந்தால் இந்த இலக்கை அடைய முடியும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை