ராமேஸ்வரம் சிறந்த நகராட்சி ஸ்டாலின் பரிசு வழங்கினார்
ராமேஸ்வரம்:சிறந்த நகராட்சியாக ராமேஸ்வரம் நகராட்சியை 2-வது முறையாக தேர்வு செய்து முதல்வர் ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம், குடிநீர், சாலை வசதி மேம்படுத்துதல், வரி வசூலில் சிறந்து விளங்கும் நகராட்சிகளுக்கு தமிழக அரசு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டுகிறது. அதன்படி ராமேஸ்வரம் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 2வது பரிசாக ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை நேற்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கானிடம் வழங்கி பாராட்டினார். உடன் நகராட்சிகளின் ஆணையர் குமரன் இருந்தார். கடந்த 2023ல் ராமேஸ்வரம் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது.