ராமேஸ்வரம் பக்தர்கள் வசதிக்காக பந்தல் அமைக்க வலியுறுத்தல்
ராமநாதபுரம்: வெயலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்க வேண்டும். 4 ரதவீதிகளில் தகரப்பந்தல் அமைக்க வேண்டும் என ஹிந்து பாரத முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர்.கோடை காலமான ஏப்., மே மாதங்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க நான்கு ரதவீதிகளில் தற்காலிக தகரப்பந்தல் அமைக்க வேண்டும். பக்தர்களுக்கு இலவச கழிப்பறை, உடைமாற்றும் அறை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம், கோயில் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்க வேண்டும்.பங்குனி உத்திரவிழா நாட்களில் இறை அன்பவர்கள் நீர்மோர் பந்தல் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.