மேலும் செய்திகள்
கள்ளப்படகில் இலங்கை சென்ற 3 அகதிகள்
03-Jun-2025
ராமேஸ்வரம்:மீன் பிடி தடைக்காலம் முடிந்து 63 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து இறால் மீன்களையும் பறித்துச் சென்றனர். இதனால் அதிக மீன்வரத்தின்றி மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.மீன் பிடி தடை காலம், சூறாவளியால் 63 நாட்களுக்கு பிறகு ஜூன் 17ல் நள்ளிரவு மீன்துறை அனுமதியின்றி ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்தியா - இலங்கை எல்லைப் பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினர். இதில் சராசரியாக படகிற்கு 100 முதல் 150 கிலோ இறால் மீன்கள் சிக்கின. கடந்தாண்டு இதே சீசனில் ஒரு படகிற்கு சராசரியாக 200 முதல் 300 கிலோ வரை இறால் சிக்கியது. ஆனால் முதல் நாளே இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.தங்கச்சிமடம் மீனவர் ராஜா கூறியதாவது: நடுக்கடலில் கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் எங்களை மடக்கிப் பிடித்தனர். பின் படகில் இருந்து 10 கிலோ அளவில் இறால் மீனை அள்ளிச் சென்று இங்கு மீன்பிடிக்கக் கூடாது என துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டினர்.இதே போல் 10க்கும் மேற்பட்ட படகுகளை மடக்கி பிடித்த இறால் மீன்களை பறித்து கொண்டனர். பீதியில் தொடர்ந்து அங்கு மீன் பிடிக்காததால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் படகில் பழுது நீக்க வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையுள்ளது என்றார்.
03-Jun-2025