உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் - கன்னியாகுமரி தினமும் ரயில் இயக்க வேண்டும்

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி தினமும் ரயில் இயக்க வேண்டும்

ராமநாதபுரம் : -ராமேஸ்வரத்தில் இருந்து தினசரி கன்னியாகுமரிக்கு அதிவேக விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள்எதிர்பார்க்கின்றனர்.ராமேஸ்வரத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் கன்னியாகுமரிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திங்கள், புதன், சனிக்கிழமை இரவு 9:10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு காலை 4:25 மணிக்கு கன்னியாகுமரிக்கு செல்கிறது.அதே போல் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இரவு 10:15 க்கு புறப்பட்டு காலை 5:25 க்கு ராமேஸ்வரம் வருகிறது. இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.வட மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் கன்னியாகுமரி செல்வதற்கும், ராமேஸ்வரம் செல்வதற்கும் இந்த ரயில் வசதியாக உள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதற்கும், ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் இந்த ரயில் வசதியாக உள்ளது.இந்த ரயில் சேவை வாரத்திற்கு 3 நாள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை