மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
ராமநாதபுரம், : மாவட்டத்தில் 21 அரசு பள்ளிகளில் நுாற்றாண்டு விழாகொண்டாட்டம் நடந்தது. இதை சிறப்பாக கொண்டாடிய ராமேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு முதல் பரிசுகிடைத்தது. தமிழகம் முழுவதும் 2211 அரசு பள்ளிகளில் நுாற்றாண்டு திருவிழா நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 அரசுபள்ளிகளில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை மண்டபம் ஊராட்சி ஒன்றியம், ராமேஸ்வரம் நடுநிலைப்பள்ளி எண்:1ல் சிறப்பாக கொண்டினர். முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் அதிகளவில் பங்கேற்றனர். இதையடுத்துஇப்பள்ளி முதலாம் இடத்தில் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பாராட்டுச்சான்றிதழ், நினைவு பரிசை கலெக்டர்சிம்ரன்ஜீத் சிங் காலோன் பள்ளி தலைமையாசிரியர் ராஜலட்சுமியிடம் வழங்கி பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், பள்ளிமுன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
16-Aug-2025