உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதி சாலையில் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட,தென் மாநிலத்தில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2013ல் கோயில் நான்கு ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து சென்று புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.போலீசார் தடை உத்தரவை பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் வரவேற்ற நிலையில், 2021 முதல் கோயில் ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெரு சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. இக்கடைகளால் விழாக்காலம் மற்றும் தொடர் விடுமுறை நாளில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. பழநி முருகன் கோயில் அடிவாரத்தில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போல், இங்குஉள்ள கடைகளை அகற்றிடஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி