கீழக்கரை நகராட்சியில் மக்கள் குறைகள் சொல்ல பதிவேடுகள்
கீழக்கரை; கீழக்கரை நகராட்சியில் பொதுமக்கள் தங்களது குறைகளை சொல்லி நிவர்த்தி செய்வதற்காக அலுவலக வளாகத்தில் பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:கீழக்கரையில் 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் வாறுகால் சேதம், மின்தடைப் பிரச்னை, சேதமடைந்த ரோடு, ரோட்டில்ஓடும் கழிவு நீர், குடிநீர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் தீர்த்து வைக்கக்கூடிய அத்தியாவசியப் பிரச்னைகள் உள்ளிட்டவைகளை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் இங்குள்ள நோட்டில்குறைகளை எழுதி வைத்துச் செல்லலாம். அவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள்அவற்றிற்கு தீர்வு காண்பார்கள். இந்த நடைமுறை பொதுமக்களிடம்அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றனர்.