உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மன்னார் வளைகுடா கரை ஓரம்  தேங்கியிருந்த குப்பை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

மன்னார் வளைகுடா கரை ஓரம்  தேங்கியிருந்த குப்பை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ராமநாதபுரம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பெரியபட்டினம் அருகே கடற்கரை கிராமங்களில் கடற்கரை ஓரம் குவிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தை பாதுகாப்பதில் கடலோரங்களில் உள்ள மணற்பாங்கான கடற்கரை, சமவெளிகள், உவர்நீர் பகுதிகள், சதுப்பு நில உப்பங்கழிகள், அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்கரையையொட்டி காணப்படும் பெரியப்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் கடற்கரை அருகே கொட்டி வைக்கின்றனர். காற்று பலமாக வீசும் போதும், கடல் அலை அதிகமாக இருக்கும் போதும் கடற்கரையோரம் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பை கடலுக்குள் அடித்து செல்லப்பட்டு கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அப்பகுதியில் குவிக்கப்பட்ட குப்பை அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி