உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமை கருவேலம் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

கீழக்கரை ஜெட்டி பாலம் கடற்கரை அருகே சீமை கருவேலம் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

கீழக்கரை; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கீழக்கரை ஜெட்டி பாலம் அருகே ஆக்கிரமித்திருந்த சீமைக் கருவேல மரங்கள்அகற்றப்பட்டது.கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் 2011ல் ஜெட்டிபாலம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்களும், மீனவர்களும் வந்து செல்லும் நிலையில் கடற்கரை வளாகப் பகுதியில் பராமரிப்பின்றி சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை 10:00 மணிக்கு கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா உத்தரவின் பேரில் கடற்கரை வளாகப் பகுதியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரம் மற்றும் புதர் செடிகள் அகற்றப்பட்டன.அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் விரைவில் அப்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் எண்ணிக்கையில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ