மேலும் செய்திகள்
சீமை கருவேல மரங்களால் காடாக உருமாறிய காவிரி
01-Apr-2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடும் தண்ணீர் பார்த்திபனுார் நீர்தேக்கம் துவங்கி பரமக்குடி ஆறு வழித்தடம் வழியாக கால்வாய்கள் மூலம் கண்மாய்கள், ஊருணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இறுதியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய், சர்க்கரகோட்டை கண்மாய்களை நிரப்பிய பிறகு உபரிநீர் ஆற்றங்கரையை சென்றடைகிறது. இந்த நீர்வழித்தடம், ஆற்றின் இருகரைகள், கால்வாய்கள், நீர்டிப்பு பகுதிகளில் தண்ணீரை அதிகளவில் உறிஞ்சும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.இதனால் வைகை அணைக்கு தண்ணீர் வந்தாலும் முழுமையாக பாசனத்திற்கு பயன்படுத்த முடியவில்லை. எனவே வரத்து கால்வாய்கள், ஆற்றின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அரசிற்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து ராமநாதபுரத்தில் ஆற்றின் வழித்தடம், வரத்துகால்வாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற ரூ.5 கோடியே 50 லட்சத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் கூறுகையில், பார்த்திபனுார் நீர்த்தேக்கம் துவங்கி ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை வரை 78 கி.மீ., உள்ள ஆற்றின் இரு கரைகள், கால்வாய்க்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்து பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.அரசாணை வெளியான பிறகு சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு அவ்விடங்களில் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நட உள்ளோம் என்றனர்.
01-Apr-2025