உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாயில் வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்றுங்கள்

பெரிய கண்மாயில் வளர்ந்து வரும் கருவேல மரங்களை அகற்றுங்கள்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் 400 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 300 ஏக்கருக்கு மேல் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் கண்மாயில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே தேக்கும் நிலை உள்ளது. இதனால் ஆண்டு தோறும் விவசாயிகள் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இன்றி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. பெரிய கண்மாய் பாசனத்தில் 12 ஆயிரத்து 142 ஏக்கர் உள்ள நிலையில் சீமைக்கருவேல மரங்களால் கண்மாயில் போதிய தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்படுவதால் ஆண்டு தோறும் விவசாயிகள் கடைசி நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரிய கண்மாயில் வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை