உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

கீழக்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி விரிவாக்கம் மற்றும் அவற்றிற்குரிய அடிப்படை வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பேரூராட்சியில் இருந்து கீழக்கரை நகராட்சியாக கடந்த 2011ம் ஆண்டில் இருந்து தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 31 டிச., 2024ல் கீழக்கரை நகராட்சியுடன் காஞ்சிரங்குடி, தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளை இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகும் கூட நகராட்சி எல்லை விரிவாக்கம் பற்றியோ அல்லது அரசாணை செயல்முறை உத்தரவு பிறப்பிக்கப்படாமலே இன்று வரை உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. நகராட்சி விரிவாக்கம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.பா.ஜ., நகர் தலைவர் மாடமுருகன் கூறியதாவது: கீழக்கரை நகரில் 21 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளான வாறுகால் மூடி மற்றும் வாறுகால் கசிவு, குடிநீர் குழாய் கசிவு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் உள்ளன. மத்திய அரசு மூலம் ஜல் ஜீவன் திட்டத்திற்கு வந்த நிதியில் இருந்து இதுவரை குடிநீர் சேவைகள் சரி செய்யாமல் உள்ளது. மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை