உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆசிரியர் தகுதித்தேர்வில்  விலக்கு அளிக்க கோரிக்கை

 ஆசிரியர் தகுதித்தேர்வில்  விலக்கு அளிக்க கோரிக்கை

ராமநாதபுரம்: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் வலியுறுத்தினர். பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம் மதுரை கிளை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா ராமநாதபுரத்தில் நடந்தது. அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். சங்க நிறுவனத் தலைவர் இளங்கோவன், தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024--25 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பார்வையற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் மாரிகனி, மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், ராமநாதபுரம் ஒருங்கிணைந்தக் கல்வி உதவி திட்ட அலுவலர் கணேசபாண்டியன், இந்திய செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி