உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேல்நிலை தொட்டியை தரமாக கட்ட கோரிக்கை

மேல்நிலை தொட்டியை தரமாக கட்ட கோரிக்கை

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சியில் கட்டப்படும் ஒரு லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தரமாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கன்னிராஜபுரம் பொதுமக்கள் கூறியதாவது:கன்னிராஜபுரத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.ரூ.6 லட்சத்திலான புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணி தரமற்றதாக உள்ளது. எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு பணிகளை செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை