உயர் மட்ட போர்டு வைக்க கோரிக்கை
திருவாடானை: திருவாடானை- தொண்டி சாலையில் திருவெற்றியூர் விலக்கில் உயர் மட்ட பெயர் பலகை வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. திருவாடானையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் செல்லும் பிரிவு சாலை உள்ளது. ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த இடத்தில் புதிதாக வருபவர்களுக்கு திருவெற்றியூர் செல்லும் வழி தெரியாமல் திணறும் நிலை உள்ளது. இது குறித்து மக்கள் கூறுகையில், இரவு நேரங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வழி தெரியாமல் செல்கின்றன. நெடுஞ்சாலையின் குறுக்கே பெரிய அளவிலான உயர் மட்ட வழிகாட்டி பலகை அமைக்கப்படவேண்டும். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் ரோட்டை கவனிக்காமல் பல கி.மீ., தாண்டி சென்று விடுவதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இங்கு உயர் மட்ட போர்டு வைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ---