மேலும் செய்திகள்
சாலையில் சீரமைப்பு பணி அறிவிப்பு பலகை அவசியம்
07-Jun-2025
முதுகுளத்துார்: அரசு திட்டப் பணிகளில் முறைகேடு நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பணிவிபரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கருங்கலக்குறிச்சி கண்மாயில் தற்போது கண்மாய் மராமத்து பணி நடக்கிறது. ஆனால் பணிவிபரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதுகுறித்து நா.த.க., மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகலா கூறியதாவது, கருங்கலக்குறிச்சி கண்மாய் மராமத்து பணியின் விவரங்கள் குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல் வேலை நடக்கிறது. இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலைகள் நடைபெறும் சூழ்நிலையில் அறிவிப்பு பலகை வைப்பது கிடையாது. பணிகள் முடிந்த பிறகு தான் வைக்கப்படுகிறது. மக்களுக்கு பணிகளின் வேலை விபரங்கள் குறித்து தெரியவில்லை. சில இடங்களில் முறைகேடும் நடக்கிறது. அரசு பணிகள் விபரம் குறித்து அறிவிப்பு பலகை வைக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என்றார்.
07-Jun-2025