உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலக்கிடாரத்தில் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

மேலக்கிடாரத்தில் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

கடலாடி : கடலாடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தில் ரோட்டின் நடுவே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலக்கிடாரத்தில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள நடு ரோடு பொது வழிச்சாலையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் நாளுக்கு நாள் ரோடு சுருங்கி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலக்கிடாரம் விவசாயிகள் முனியசாமி, தேசிங்கு ராஜா, வில்லாயுதம் ஆகியோர் கூறியதாவது: பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கிராம நடு சாலையின் ஆக்கிரமிப்புகளால் அத்தியாவசிய குடிநீர் டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல வழியின்றி உள்ளது. இதனால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.எனவே கடலாடி வருவாய்த் துறையினர் குறைகளை நிவர்த்தி செய்தால் பொதுமக்களுக்கு தேவையான பாதை வசதி கிடைக்கும். இது குறித்து கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை