உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சீமைக்கருவேலம் அகற்ற கோரிக்கை

சீமைக்கருவேலம் அகற்ற கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம்,:ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில் இருந்து கண்ணுகுடி , குமிழேந்தல், பகவதிமங்கலம் வழியாக திருவொற்றியூர் செல்லும் ரோட்டில் இரு ஓரங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் முள் புதர்கள் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டோர முள் புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி