மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
ஆர்.எஸ்.மங்கலம்; திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் எரியாததால் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது.இதனால் பஸ் ஸ்டாப் வரும் பெண் பயணிகள் இரவில் கடும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. அதிக பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் ஸ்டாப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காட்சி பொருளாக உள்ள மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.