உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை-திருவெற்றியூர் ரோடு அகலப்படுத்த கோரிக்கை

திருவாடானை-திருவெற்றியூர் ரோடு அகலப்படுத்த கோரிக்கை

திருவாடானை: திருவாடானை- திருவெற்றியூர் ரோட்டை அகலப்படுத்த வலி யுறுத்தப்பட்டுள்ளது. திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடு செல்கிறது. திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் இருப்பதால் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்பவர்கள் திருவெற்றியூர் வழியாக வீரசங்கலிமடம் மற்றும் மணக்குடிக்கு செல்ல இந்த ரோட்டை பயன்படுத்துவதால் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதில் குளத்துார் காலனி முதல் படப்பை வரை ரோட்டை அகலப்படுத்தாமல் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு உள்ளது. இது குறித்து குளத்துார் ஊராட்சி முன்னாள் தலைவர் குமார் கூறியதாவது: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் சித்திரை, ஆடி மாதங்களில் நடை பெறும் விழாக்களுக்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். பாதயாத்திரையாகவும், வேன், கார்களில் வருபவர்களும் அதிகம். அரசு போக்கு வரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பல்வேறு இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் எதிர் எதிரே கடந்து செல்லும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே இந்த ரோட்டை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை