உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளியால் கடலில் விழுந்த மீனவர் மீட்பு : படகு மாயம்

சூறாவளியால் கடலில் விழுந்த மீனவர் மீட்பு : படகு மாயம்

ராமேஸ்வரம் ; ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் சூறாவளியால் தவறி விழுந்து தத்தளித்த மீனவர் மீட்கப்பட்டார். மாயமான அவரது படகை மீனவர்கள் தேடி வருகின்றனர். மண்டபம் வேதாளை கடற்கரையில் இருந்து நவ.12ல் சரவணன் என்பவரது சிறிய ரக பைபர் கிளாஸ் படகில் மீனவர் முருகேசன் 52, மட்டும் மீன்பிடிக்க சென்றார். இவர் மன்னார் வளைகுடா தீவு அருகில் கடலில் வலையை வீசிக் கொண்டிருந்த போது சூறாவளி வீசியதால் நிலை தடுமாறி கடலில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் நீந்தினார்.அப்போது அவ்வழியாக மீன்பிடித்து வந்த மற்றொரு படகின் மீனவர்கள் முருகேசனை மீட்டு வேதாளை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் காற்றின் வேகத்தில் அவரது படகு இழுத்துச் செல்லப்பட்டு மாயமானது. மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் மீனவர்கள் தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை. மண்டபம் மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை