உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மண்டபத்தில் ஒடிசா சிறுவன் மீட்பு 

மண்டபத்தில் ஒடிசா சிறுவன் மீட்பு 

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கிய சிறுவன் அப்பகுதியில் சுற்றித் திரிந்தான். ரயில் நிலையத்தில் இருந்த சைல்ட் லைன் அமைப்பினர் விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் போலீசார் உதவியுடன் ராமநாதபுரம் அழைத்து வந்தனர்.சிறுவனிடம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் விசாரித்தனர். இதில் சிறுவன் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவன் பெயர் புத்தையா என்பதும் தெரிய வந்தது. குடும்ப வறுமையால் சென்னைக்கு வேலைக்கு வந்ததாகவும், சென்னையில் இருந்து வழி தெரியாமல் மண்டபம் பகுதிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.சிறுவனை காரைக்குடி அருகே ஒ.சிறுவயல் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஒடிசா மாநிலக் குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு தெரிவித்து பெற்றோரை கண்டறிந்து தெரிவிக்குமாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !