உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உணவகத்தில் வாழை இலையில் பார்சல் வழங்க வேண்டும்! 14 நாள் கெடு! விதிகளை கடைபிடிக்க உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

உணவகத்தில் வாழை இலையில் பார்சல் வழங்க வேண்டும்! 14 நாள் கெடு! விதிகளை கடைபிடிக்க உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பரிமாற, பார்சலுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பயன்படுத்த கூடாது. வாழை இலைகள், பார்ச்மென்ட் பேப்பரை பயன்படுத்த வேண்டும். 14 நாட்களுக்குள் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால் திடீர் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தர நிர்ணய சட்டப்படி உணவு வணிகர்கள் http://foscos.fssai.gov.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி யிருக்க வேண்டும். குடிநீரை பகுப்பாய்வு செய்து அதன் ஆய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப் படுத்த வேண்டும். விற்காத உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப் படுத்த வேண்டும். செய்தித்தாள்கள் போன்ற அச்சிடப்பட்ட காகிதங்கள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் உணவு பொருட்களை வழங்கக் கூடாது. அயோடின் கலக்காத உப்பு இருக்க கூடாது. வடைகள், சிக்கன் 65 போன்ற வற்றில் செயற்கை நிறமிகள் சேர்க்க கூடாது. சமையல் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். fssai அங்கீ கரித்த நபர்களிடம் மட்டுமே பழைய சமையல் எண்ணெய் விற்க வேண்டும். இந்த விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவற்றை 14 நாட் களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் திடீர் ஆய்வு செய்து விதிமீறலுக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும். மேலும் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களை 04567 - 231 170, மாநில வாட்ஸ் ஆப் புகார் எண் 94440 42322 எண்களில் மற்றும் மேற்கண்ட இணையதள முகவரியில் மக்கள் புகார் அளிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி