உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் மீது கார் மோதியதில்ஓய்வு பெற்ற ஊழியர் பலி

டூவீலர் மீது கார் மோதியதில்ஓய்வு பெற்ற ஊழியர் பலி

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வாலாந்தரவையை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆறுமுகம் 63, தனது மனைவி சாந்தி, பேரன்களுடன் டூவலரில் நேற்று முன் தினம் மதியம் 1:00 மணிக்கு வாணி பஸ் ஸ்டாப் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பேரிகார்டில் யார் முந்தி செல்வது என்ற நிலையில் கர்நாடகாவில் இருந்து வந்த கார் மோதியதில் ஆறுமுகம் பலியானார். சாந்தி மற்றும் பேரன்கள் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ