உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் முதுகுளத்துாரில் மின் விபத்து அபாயம்

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்களால் முதுகுளத்துாரில் மின் விபத்து அபாயம்

முதுகுளத்தூர்; முதுகுளத்துார் வழிவிடுமுருகன் கோயில் அருகே பரமக்குடி ரோட்டில் லாரியில் அதிகபாரம் ஏற்றி செல்லும்போது உயரழுத்த மின்கம்பியில் உரசியதால் லாரி நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. முதுகுளத்துாரில் சில வாகனங்களில் அளவுக்கு அதிகமான பாரங்கள் ஏற்றி செல்லப்படுகிறது. அப்போது ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பி மீது உரசுவதால் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் அருகே பரமக்குடி ரோட்டில் அதிபாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது உயரழுத்த மின்கம்பி உரசியது. இதனை அறிந்த டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டனர். இதனால் இவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அதற்குப் பிறகு லாரி ஊருக்குள் செல்ல முடியாமல் மீண்டும் திரும்ப சென்றன. முதுகுளத்துாரில் அளவுக்கு அதிகமாக வாகனங்களில் பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 23:34

கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும் முக்கியமாக கம்பிகள் இணைப்புகள் சந்திக்கும் இடங்களில் கவனம் செலுத்த வேண்டும் லாரிகளின் உருவங்கள் மாற்றம் அடைந்து உள்ள நிலையில் மின்சார துறையும் சிறிது கவனம் செலுத்த வேண்டும்


புதிய வீடியோ