அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்த ஆர்.ஓ., பிளான்ட்
திருப்புல்லாணி; தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆர்.ஓ., பிளான் பயன்பாட்டிற்கு வந்தது.இங்கு 2024 ஆக.,ல் அமைக்கப்பட்ட புதிய ஆர்.ஓ., பிளான்ட் செயல்படாமல் காட்சிபொருளாக இருந்தது. கிணற்று நீரை பயன்படுத்தி அவற்றை உரிய முறையில் சுத்திகரிப்பு செய்து பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.10 லட்சத்தில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது. கடந்த பல நாட்களாக செயல்படவில்லை. இது குறித்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் வேதனை தெரிவித்தனர். தினமலர் நாளிதழில் பிப்., 2ல் இதுகுறித்து படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் தன்னார்வ சேவை திட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆர்.ஓ., பிளான்ட் பழுது நீக்கம் செய்யப்பட்டது.திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரக்கூடிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தங்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளதாக ஓ.என்.ஜி.சி., நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.