மேலும் செய்திகள்
தெருவிளக்கு இன்றி இருளில் தவிக்கும் மக்கள்
18-Jan-2025
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட செல்லிஅம்மன் கோவில் தெருவில் ரோடு சகதிக்காடாக மாறியதால் வாகனங்களில் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.ஆறாவது வார்டுக்கு உட்பட்ட கீழரத வீதி, செல்லிஅம்மன் கோயில், பஜார் தெருவில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு செல்லி அம்மன் கோவில் தெருவில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோடு கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது.இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் புதிதாக ரோடு அமைக்கப்படவில்லை. இந்நிலையில் சிறிய மழை பெய்தால் கூட சேறும் சகதியுமாக நடப்பதற்கே லாயக்கற்ற ரோடாக மாறி உள்ளது. டூவீலரில் செல்பவர்கள் கூட விபத்தில் சிக்குகின்றனர்.சிலர் சுற்றிச் செல்லும் அவலநிலை உள்ளது. எனவே செல்லிஅம்மன் கோயில் முன்பு புதிதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
18-Jan-2025