மேலும் செய்திகள்
புகையில்லாத போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்
13-Jan-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாநி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்புத் துறை சார்பில் டூவீலர்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.,1 முதல் 31 வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து டூவீலர்களில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முருகன் முன்னிலை வகித்தார். முன்னதாக அனைவரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்தனர். ெஹல்மட் அணிவது, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பாரதிநகர், குமரய்யா கோவில் ரோடு வழியாக சென்று கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் ஊர்வலம் முடிவடைந்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
13-Jan-2025