/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு கலைக் கல்லுாரிக்கு ரூ.25 லட்சத்தில் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி
அரசு கலைக் கல்லுாரிக்கு ரூ.25 லட்சத்தில் ரோடு; தினமலர் செய்தி எதிரொலி
பரமக்குடி : பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி ரோடு சேதம் குறித்து தினமலர் நாளிதழ் அடிக்கடி சுட்டிக்காட்டிய நிலையில் ரூ.25 லட்சத்தில் புதிய ரோடு அமைக்கப்பட்டது. பரமக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தொடர்ந்து மதுரை, மண்டபம் ரோட்டை ஒட்டி உள்ள கல்லுாரி சாலை சேதமடைந்து பயனற்று இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டிய நிலையில் அவ்வப்போது கட்டட இடிபாடுகளை வைத்து சீரமைத்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ., முருகேசனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 2025--26 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தார் ரோடு அமைத்து சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.