உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்

முதுகுளத்துாரில் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஜார், தேரிருவேலி விலக்கு ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பஜார், காந்தி சிலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் 'ஆக்கிரமிப்பு அட்டகாசம்' படம் வெளியானது. இந்நிலையில் முதுகுளத்துார் வருவாய்த் துறையினர்,பேரூராட்சி துறையினர், போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.தாசில்தார் சடையாண்டி தலைமையில் துணை தாசில்தார் சங்கர், ஆர்.ஐ.,தினேஷ்குமார் முன்னிலையில் பணிகள் நடந்தது. பஜார், தேரிருவேலி விலக்கு ரோட்டோரத்தில் கடைகளால் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்றினர். இனிவரும் நாட்களில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ