உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை   மிளகாய் பொடி துாவி சென்ற கொள்ளையர்

 வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை   மிளகாய் பொடி துாவி சென்ற கொள்ளையர்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 5 வது தெருவில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிய கொள்ளையர்கள் மிளகாய் பொடியை துாவி சென்றனர்.ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 5 வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 65. இவர் கோவையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் உணவகம் நடத்தி வருகிறார். ரவிச்சந்திரன் நான்கு மாதமாக தனது குடும்பத்தினருடன்கோவையில் வசித்து வருகிறார். ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள வீட்டை பராமரிப்பு செய்ய உறவினர்களிடம் சாவியை கொடுத்துள்ளார்.நேற்று (ஜூன் 25) காலை ரவிச்சந்திரன் வீட்டில் அவரது உறவினர் பராமரிப்புக்காக சென்ற போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தடவியல் நிபுணர், மோப்ப நாய் பைரவி உதவியுடன் சோதனை நடத்தினர். மோப்ப நாயை திசை திருப்பும் விதமாகமிளகாய் பொடியையும், மீன் குழம்பு பொடியையும் துாவி சென்றுள்ளனர். வீட்டில் இருந்த 5 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. ரவிச்சந்திரன் புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை