உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரெகுநாதபுரம் பள்ளியில் ரோபோடிக் போட்டிகள்

ரெகுநாதபுரம் பள்ளியில் ரோபோடிக் போட்டிகள்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரோபோடிக் போட்டிகள் நடந்தது. ரோபோ இயந்திரம் மூலம் ரோபோ ரேஸ், ரோபோட் சாக்கர், பாஸ்டஸ்ட் லயன் பாலோவர் உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி யில் இருந்து 6 முதல் 9 வகுப்பு மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ரோபோட் பாஸ்டஸ்ட் லயன் பாலோவர் பிரிவில் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. ரோபோட் ரேஸ் போட்டி யில் ராமநாதபுரம் லுாயிஸ் லெவல் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதலிடம், ரோபோட் சாக்கர் நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல் இடம் பிடித்தது. பள்ளித் தாளாளர் கோகிலா துவக்கி வைத்தார். நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா வரவேற்றார். துணை முதல்வர் முத்துக்கண்ணு நன்றி கூறினார். ரோபோடிக் பயிற்சி யாளர் காட்பிரெயின் போட்டிகளை ஒருங் கிணைத்தார். ரோபோடிக் மூலம் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய யுக்திகள் மற்றும் தொலைநோக்கு சிந்தனை குறித்தும், ரோபோக்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை