உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.40 லட்சம் கஞ்சா கடத்தியோருக்கு வலை

ரூ.40 லட்சம் கஞ்சா கடத்தியோருக்கு வலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், ஹவாலா பணத்தை கேரள மாநிலத்திற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடத்தி செல்வதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள், ஒரு வாரமாக கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, பொக்கரனேந்தல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் கீழக்கரை பஸ் ஸ்டாண்டிலிருந்து, கடற்கரைக்கு செல்லும் சாலையில், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போது, டூ வீலரில் இருவர் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக சென்றனர்.அவர்களை மடக்கிய போது, அவர்கள் கொண்டு சென்ற பார்சலை, கீழே போட்டு டூ வீலரில் தப்பினர்.அதிகாரிகள் பார்சலை சோதனையிட்ட போது, உயர் ரக கஞ்சா, 40 கிலோ இருந்தது. அதன் மதிப்பு, 40 லட்சம் ரூபாய். தப்பி சென்றவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை