உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உரிய  ஆவணங்களின்றி  வைத்திருந்த ரூ.4.61 லட்சம் பறிமுதல் 

 உரிய  ஆவணங்களின்றி  வைத்திருந்த ரூ.4.61 லட்சம் பறிமுதல் 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 4 லட்சத்து 61 ஆயிரத்து 350 ரூபாயை தேர்தல் அதி காரிகள் கைப்பற்றினர். சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாத புரம், முதுகுளத்துார் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண் காணிப்பு குழுவினர் நான்கு தொகுதியிலும் வாகன தணிக்கை, கள கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த மார்ச் 15 முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்ட போது பரமக்குடி தொகுதியில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம், திருவாடானை தொகுதியில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 730 மற்றும் முதுகுளத்துார் தொகுதியில் ரூ.53 ஆயிரத்து 620 என ரூ. 4 லட்சத்து 61 ஆயிரத்து 350 பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததை நிலையான கண்காணிப்பு குழு கண்டறிந்து பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை