உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ரூ.54 ஆயிரம் பறிமுதல்

 ரூ.54 ஆயிரம் பறிமுதல்

சாயல்குடி: சட்டசபை தேர்தல் அறிவித்ததை முன்னிட்டு 24 மணி நேரமும் தனிப் பிரிவு அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சாயல்குடி அருகே மலட்டாறு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை 10:00 மணிக்கு தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜனிடமிருந்து ரூ.54,000 பறி முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !