உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் மாதாந்திர கவுன்சில் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சேகர், பி.டி.ஓ., மலைராஜ் முன்னிலை வகித்தனர். மாதாந்திர வரவு செலவுகள் குறித்தும், அடிப்படை பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்று ஐந்தாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் கடைசி கூட்டமாக இருக்கக்கூடும் என்பதால் யூனியன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தின் வாயிலாக யூனியன் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் யூனியன் பகுதியில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து யூனியன் தலைவர் ராதிகா விளக்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ