ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சங்க மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஆலோசகர் தினகரன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் ராஜன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் பெருமாள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜன் உட்பட பலர் பேசினர்.ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் துாய்மை பாரத இயக்கம் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அமல்படுத்த வேண்டும். சுகாதார ஊக்குனர்களுக்கு மார்ச் 25 வரை ஊதியம் நிலுவையின்றி வழங்க வேண்டும்.கணினி உதவியாளர்களுக்கு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூ.20 ஆயிரம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.