உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமப்புற சுகாதார செவிலியர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 

கிராமப்புற சுகாதார செவிலியர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு, பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தலைவர் விமலா, செயலாளர் ராஜலட்சுமி, பரமக்குடி சுகாதார மாவட்டத்தலைவர் சியா, செயலாளர் மணிமேகலை உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மூன்றாண்டுகளாக உள்ள 3500 கிராமப்புற செவிலியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். யுவின் ஆப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். 3.0 பிக் மியில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பெண் ஊழியர்கள் என்பதால் அதிக பணி வழங்குவதையும், மெமோ கொடுப்போம் என அச்சுறுத்துவதையும் கைவிட வேண்டும். கட்டாயப் பணி மாறுதல்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி