உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாலுமி உடல் கரை ஒதுங்கியது

மாலுமி உடல் கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம்,: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில், 50க்கு மேலான மூட்டைகள் நேற்று கரை ஒதுங்கி கிடந்தன. அவற்றில் இருந்த ஜவ்வரிசி வடிவிலான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கடற்கரையில், 5 கி.மீ., வரை பரவி கிடந்தன.மே 24ல் லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி., எல்சா எனும் சரக்கு கப்பல், 640 கன்டெய்னர்களுடன் கொச்சி அருகே கடலில் மூழ்கியது.அதிலிருந்த பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் இருந்த மூட்டைகள் இங்கு ஒதுங்கியுள்ளன. கப்பலில் வந்த ஒரு மாலுமியின் அழுகிய உடலும் கரை ஒதுங்கியது. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களை மீன்கள் உட்கொண்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை