உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

தேவிபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் தேவிபட்டினம், கோப்பேரிமடம், திருப்பாலைக்குடி, சம்பை, வாலிநோக்கம், நதிப்பாலம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தரம் உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவு பொருட்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு தோல் பதனிடுதல், கருவாடு உலர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலவும் சீதோஷ்ண நிலை (வெப்பம்) காரணமாக உப்பள பாத்திகளில் தேக்கப்படும் நீர் சில தினங்களில் உப்புகளாக மாறி வருகின்றன. இதனால் உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன், உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.மேலும் தற்போது உற்பத்தியாகும் உப்புக்கு அதிக விலை கிடைப்பதால் உப்பளத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ